For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிகவுக்காக வாக்கு கேட்க டூர் கிளம்பும் மூன்றே மூன்று ஸ்டார் பேச்சாளர்கள்...!

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய 3 பேர் கொண்ட ஒரு பட்டியலை கட்சித் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆணைப்படி இந்த பட்டியலை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்தவரும், தேமுதிக கலை இலக்கிய அணி துணைச் செயலாளருமான ராஜேந்திரநாத் பெயரும் இடம் பெற்றுள்ளது.

நடிகர் எம்.வி.எஸ்.ராஜேந்திரநாத் ஏப்ரல் 3 ம் தேதி திருவள்ளூரில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். 4-ந்தேதி- வடசென்னை, 5-ந்தேதி- மத்திய சென்னை, 6-ந்தேதி- ஆலந்தூர், 7-ந்தேதி கள்ளக்குறிச்சி, 8-ந்தேதி-சேலம், 9-ந்தேதி-நாமக்கல்,

10-ந்தேதி-கரூர், 11-ந்தேதி- திருப்பூர், 12-ந்தேதி-திண்டுக்கல், 13-ந்தேதி-நெல்லை, 14-ந்தேதி-மதுரை, 15-ந்தேதி- திருச்சி, 16-ந்தேதி-கடலூர், 17-ந்தேதி-விழுப்புரம், 18-ந்தேதி-திருவள்ளூர், 19-ந்தேதி-ஆலந்தூர், 20-ந்தேதி-வடசென்னை, 21-ந்தேதி-மத்திய சென்னை, 22-ந்தேதி-திருவள்ளூர் என்று பிரசாரம் செய்கிறார்.

இதே போல் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ 3-ந்தேதி திருப்பூரில் தொடங்கி 22-ந்தேதி வரை சுற்றுப் பயணம் செய்து சேலத்தில் பிரசாரத்தை முடிக்கிறார்.

கட்சி கொறடா வி.சி.சந்திர குமார் 3-ந்தேதி திருநெல்வேலியில் தொடங்கி 22-ந்தேதி திருப்பூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

English summary
DMDK has announced that the party's 3 star campainger will tour the state to garner support for DMDK candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X