வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று 80 சவரன் கொள்ளையடித்த சம்பவம்- 3 பேர் கைது
சென்னை: சென்னை திருமுல்லைவாயிலில் வீட்டில் தனியாக இருந்த அன்னலதா என்ற பெண்ணை கொலை செய்து, 80 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமுல்லைவாயிலில் வீட்டில் தனியாக இருந்த அன்னலதா என்பவர் கொலை செய்யப்பட்டார். 3 மாதமாக கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் வெங்கடாஜலபதி நகரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான சுமன் என்பவரை போலீசார் வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது நண்பர்கள் முகமது ராஜா, அன்பு ஆகியோருடன் சேர்ந்து, அன்னலதாவை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துது தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்,அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications