சென்னை ஆவடியைக் கதிகலங்க வைத்த 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது
சென்னை: சென்னை ஆவடி அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களிடம் வழிப்பறி செய்வது மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தன.
இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் கெங்கைராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஆவடி அடுத்த பூம்பொழில் நகர் அருகே ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்த யுவராஜ் ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளம் அடுத்த புதுவலசை பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற அப்துல்லா, சென்னை கொரட்டூர் சாரதா நகரைச் சேர்ந்த கணேஷ் என்பது தெரிந்தது. இவர்கள் ஆவடி, திருமுல்லைவாயல், கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் வழிப்பறி செய்வது மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் மோட்டார் சைக்கிள்களையும் திருடி உள்ளனர். இவர்களில் யுவராஜ், மற்றும் அப்துல்லா மீது அண்ணாநகர், மாதவரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், அப்துல்லா ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.
இதையடுத்து நேற்று மாலை 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 23 சவரன் நகை மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications