சிவகங்கை அருகே.. ஆளில்லா ரயில்வே கேட்டில் பஸ் மீது ரயில் மோதல்... 30 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 30 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாப்பான்குளத்தில், ஆளில்லா ரயில்வே கேட்டை பேருந்து ஒன்று கடக்க முயற்சித்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்த ரயில் ஒன்று, அப்பேருந்தின் மீது மோதியது.

இதில், பேருந்தில் பயணம் செய்த 30 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆளில்லா ரயில்வே கேட் என்பதால், ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை பேருந்து கடக்க முற்பட்ட போது இந்த விபத்து நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications