கோயம்பேட்டில் திருடு போன 300 பாலிடெக்னிக் சான்றிதழ்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கோயம்பேட்டில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் 300 சான்றிதழ்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் சுவாமிநாதன் . இவர் அங்குள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று மாலையில் பாலிடெக்னிக்கில் உள்ள 300 மாணவர்களின் சான்றிதழ்களை எடுத்து கொண்டு அடையாறில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க பஸ்சில் பயணம் செய்து சென்னை கோயம்பேட்டுக்கு இன்று காலை 3.30 மணிக்கு வந்தடைந்தார்.
கீழே இறங்குவதற்காக பையை தேடியபோது பையை காணவில்லை. அதில் 300 மாணவர்களின் சான்றிதழ்கள் இருந்தது. இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications