அனல் மின் நிலையத்தில் மேலும் ஒரு யூனிட் பழுது.. மின்சார உற்பத்தி பாதிப்பு
அனல் மின் நிலையத்தில் மேலும் ஒரு யூனிட் பழுதடைந்துள்ளது. இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன.
இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த யூனிட்டுகள் அடிக்கடி பழுதடைவதாலும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாலும் இங்கு மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.

அனல்மின் நிலைய 3-வது யூனிட்டில் கொதிகலனில் திடீரென பழுது ஏற்பட்டு அதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் 1, 2-வது யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 3 யூனிட்டுகளிலும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனல்மின் நிலைய ஊழியர்கள் கூறும் போது, 30 ஆண்டுகளை கடத்து இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் அடிக்கடி விபத்து மற்றும் பழுது ஏற்பட்டு வருகிறது. தற்போது 4,5-வது யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. 3-வது யூனிட்டில் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது என்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications