தொடரும் மின் சோகம்.. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3வது யூனிட் மீண்டும் 'அவுட்'

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி அலகுகள் மூலமாக நாள்தோறும் 1050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி அலகுகளில் போதுமான பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாத காரணத்தினால் அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 3வது மின் உற்பத்தி அலகில் நேற்று மதியம் பாய்லரில் திடீர் பழுது ஏற்பட்டது. இந்தபழுதின் காரணமாக இந்த அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே 3வது யூனிட்டின் பழுது சரி செய்யப்பட்டு கடந்த இருதினங்களுக்கு முன்பு தான் மின்உற்பத்தி துவங்கப்பட்ட நிலையில், 3வது யூனிட் மீண்டும் பழுதாகி மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனந்தமே என்று எல்லோரும் தடையில்லா மின் விநியோகத்தை அனுபவித்து வந்த நிலையில், அய்யய்யோ மின்வெட்டு மறுபடியும் ஆரம்பமே.... என்று சோகப்பாட்டு பாடும் நிலையில், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மின்வெட்டு அமுலுக்கு வந்துள்ள சூழலில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின்உற்பத்தி கோளாறு மின்வெட்டு நேரத்தை அதிகப்படுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications