சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்: பஸ்கண்ணாடி உடைப்பு– 4 பேர் கைது
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து கண்ணாடி உடைந்தது. மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் நான்கு பேரை கைது செய்த போலீசார், அதில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட மாணவர்களை தேடி வருகின்றனர்.
திருவேற்காடு - பெரம்பூர் செல்லும் வழித்தடம் எண், '29 இ' மாநகர பேருந்தில், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில் பயணம் செய்தனர்.
கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில், பேருந்து சென்றபோது, அங்கு நின்றிருந்த, 20க்கும் மேற்பட்ட மாநில கல்லூரி மாணவர்கள் அந்த பேருந்தை நோக்கி கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் உள்ளே மற்றும் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கினர்.
அதில் பேருந்து கண்ணாடி உடைந்தது. பயணிகள் அலறி ஓடினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கீழ்ப்பாக்கம் போலீசார் லேசான தடியடி நடத்தி, மாணவர்களை கலைத்தனர். இந்த சம்பவம் குறித்து, பச்சையப்பன் கல்லூரியில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் அரிஷ்குமார், 22, பி.பி.எம்., இரண்டாம் ஆண்டு படிக்கும் வேலியப்பன், 20, பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படிக்கும் 18 வயது மாணவர் மற்றும் மாநில கல்லூரியில் பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படிக்கும் 18 வயது மாணவர் ஆகிய நான்கு பேரை, கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மேலும், மோதலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும், போலீசார் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications