ரூ. 4 கோடி பணமும் கரகாட்டம் ஆடி சம்பாதித்தது: 'கரகாட்டம்' மோகனாம்பாள்!

வேலூர் மாவட்டம், வசந்தபுரம் இந்திர நகரை சேர்ந்த கரகாட்ட பெண் மோகனாம்பாள் வீட்டில், 75 சவரன் தங்க நகைகள், 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா ஆகியோர் நேற்று வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் நீதிபதியிடம் கொடுத்த மனு விபரம் குறித்து அவர்களுடைய வழக்கறிஞர் பாபுராஜன் கூறியதாவது:
''மோகனாம்பாளும், அவரது குடும்பத்தினரும் கரகாட்டம் ஆடியது மற்றும் அதனால் கிடைத்த பணத்தை வட்டிக்கு விட்டே பணம் சம்பாதித்துள்ளனர்.
அதனால் சம்பாதித்த பணத்துக்கு ஆதாரங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை. மற்றபடி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் வட்டி தொழில் கிடைத்தது தான். இதுதொடர்பான வருமான வரித்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கும், தகவல்களையும் அளிக்க தயாராக இருக்கிறோம்.
மோகனாம்பாளுக்கு வலது கால் முட்டியில் ஏற்பட்ட வலி காரணமாக கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்றார். அதன்பின் கடந்த 29 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூன் 2 ஆம் தேதி காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.
மருத்துவமனையில் அவருக்கு உதவியாக நிர்மலா இருந்துள்ளார். காவல்துறையினர் தங்களை தேடி வருவதும், தங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களை கைது செய்து வருவதால் தாங்களாக முன்வந்து சரணடைந்துள்ளதாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளனர்" என்றார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோகனாம்பள், இன்று காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது, மோகனாம்பாளை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications