கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்கச் சென்ற 4 பேர் விஷ வாயு தாக்கி பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை காப்பாற்றச் சென்று கிணற்றில் இறங்கிய, 4 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள துவார் கிராமத்தைச் சேர்ந்த சவுந்திரராஜன் என்பவர், குடிநீர் தேவைக்காக தனது வீட்டின் அருகே கிணறு வெட்டியிருக்கிறார். இந்த கிணற்றுக்குள் கோவிலுக்கு நேர்ச்சையாக விடப்பட்ட ஆடு ஒன்று தவறிவிழுந்தது.

அந்த ஆட்டை காப்பாற்றுவதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு என்பவர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கியிருக்கிறார். கிணற்றுக்குள் அவரை விஷவாயு தாக்கியிருக்கிறது. இதனால், அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு தடுமாறினார்.
அய்யாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அறிந்து, அவரை மீட்பதற்காக ரங்கசாமி மற்றும் பரமையா ஆகியோர் அடுத்தடுத்து இறங்கியிருக்கின்றனர். அவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது.
இதைப் பார்த்த சவுந்திரராஜன் அடுத்ததாக இறங்கியிருக்கிறார். அப்போது கயிறு அறுந்து, அவர் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறார். சற்று நேரத்தில் நான்கு பேரும் விஷவாயு தாக்கி, மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். நீண்ட நேர போட்டத்திற்கு பிறகு, 4 பேரின் உடல்களையும் மீட்டு, ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களை மீட்க முயன்ற தீயணைப்பு வீரர்களில் சிலரும் விஷ வாயுவால் மயக்கமடைந்தனர்.
கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்கச் சென்று ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications