தேர் இழுத்த போது மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவி உள்பட 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த அரியூர் குப்பத்தில் அம்மன் கோயில் திருவிழாவில் தேர் இழுத்தபோது மின்சாரம் பாய்ந்து 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த விபத்தில் 10 ஆம் வகுப்பில் இன்று தேர்ச்சி பெற்ற மாணவியும் உயிரிழந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 electrocuted in Vellore car festival

அரியூர் குப்பத்தில் இன்று காலை அம்மன் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அனைவரும் பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை இழுக்கும் போது, எதிர்பாராதவிதமாக மேலிருந்த மின்சார கம்பியில் தேர் உரசியது.

இதில் மின்சாரம் பாய்ந்து 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். . பத்துக்கும் மேற்பட்டோர் காயத்தோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 4 பேரில் ரேணுகா என்ற பத்தாம் வகுப்பு மாணவியும் அடக்கம். இவர் இன்று தேர்வு முடிவுகள் வெளியானதில் 500 க்கு 341 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மகிழ்ச்சியைக் கூட கொண்டாட முடியாமல் 10 ஆம் வகுப்பு மாணவி ரேணுகா உயிரிழந்தது அரியூர் குப்பம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+