ஓட்டலில் சாப்பிடதும் இல்லாமல் கல்லாபெட்டியையும் ஆட்டையை போட்ட 4 நண்பர்கள்!!
சிவகாசி: சிவகாசியில் சாப்பிட்ட ஓட்டலில் ரூபாய் 5 ஆயிரம் பணம் பறித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி மேலரத வீதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 4 பேர் சாப்பிட வந்துள்ளனர். அங்கிருந்த ஓட்டலின் உரிமையாளர் சுப்புராஜியிடம் தங்களுக்கு சாப்பிட தேவையானஉணவு பொருட்களை கேட்டுவாங்கி சாப்பிட்டனர்.
அப்போது கடையின் உரிமையாளர் சாப் பிட்ட உணவு பொருட் களுக்கானபணத்தை கேட்ட போது ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்க முடியாது என்று கூறினார். பின்னர் 4 பேரும் ஓட்டலில் இருந்த கல்லா பெட்டியில் வைக்கப் பட்டிருந்த ரூபாய் 5 ஆயிரம்ரொக்க பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட னர்.
பின்னர் இந்த சம்ப வம் குறித்து சிவகாசிநகர் போலீ சுக்குஓட்டல்உரிமையாளர் சுப்புராஜ் தகவல் கொடுத் தார். அதன் பேரில் இன்ஸ் பெக்டர் பாலமுருகன் மற் றும் போலீசார் சம்பவஇடத் துக்கு சென்றுவிசாரணை நடத்தினர்.
இதில் ஓட்ட லுக்கு வந்து கத்தியைகாட்டி மிரட்டி பணத்தை கொள்ளை யடித்து சென்ற கும்பல் குறித்து அடையாளம் தெரிவிக் கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சாத்தூர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதுநேற்று காலை அங்கு நின்ற கொண் டிருந்த பூ முருகன், திருத்தங்கல்லை சேர்ந்த ஒய்யா என்கிற உதய குமார், முனிய சாமி, கார்த்திக் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications