சிவகங்கை அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
சிவகங்கை: சிவகங்கை அருகே மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் தவச்தாரேந்தல் கிராமத்தில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின்கசிவால் அங்கிருந்த புயல் ( 50), லெட்சுமி (27), மீனா, பிரியதர்ஷிணி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மாங்குளம் அருகில் உள்ள மலையடி குளத்தில் இரவு 7 மணி அளவில் மது அருந்திவிட்டு குளிக்க முயன்ற, கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் (35) மற்றும் துரை மகன் பாண்டியன் (29) கொத்தனார் இருவரும் நீரில் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் ரமேஷ் என்பவரை காப்பாற்றிவிட்டனர்.

ஆனால் பாண்டியன் என்பவர் ஆழமான நடுப்பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி இறந்திருக்கலாமென பொதுமக்கள், காவல்துறை மற்றும் தீயணைப்புப் படைகள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications