சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, பல்லாவரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கோபால்செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து( 34). இவரது மனைவி துளசி (28). இவர்களுக்கு பிரித்தி (8), சரண்யா(5) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அருகே இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் 4 பேரும் பிணமாக கிடந்தனர்.

4 person committed suicides in chennai

இவர்கள் வீட்டிலிருந்து இன்று தூர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சங்கர்நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து வீட்டுக்குள் பார்த்தபோது அழுகிய நிலையில் 4 பேரும் பிணமாக கிடந்தனர். 4 பேரின் உடல்களையும் மீட்ட சங்கர் நகர் போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+