புதுச்சேரி வினோதினி தற்கொலை: 4 பேராசிரியர்கள் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் கல்லூரி வளாகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பேராசிரியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சுல்தான் பேட்டையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது மகள் வினோதினி, மதகப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த வினோதினியை பிற மாணவர்கள் முன்னிலையில் பேராசிரியர்கள், திட்டியதாக கூறப்படுகிறது. அதனால், மனமுடைந்த அவர் நேற்று திங்கட்கிழமை கல்லூரியின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி தற்கொலை சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மாணவர்களுடன், பெற்றோர்களும், மாணவியின் உறவினர்களும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவைச் சந்தித்து, மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதன் எதிரொலியாக, ஐந்து பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது 4 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தவளக்குப்பம் காவல்நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பேராசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications