40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது... திவாகரன் 'பொளேர்'
தங்களுக்கு 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரன்.
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: அதிமுகவின் 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் திவாகரன் கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார். அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

எங்களுக்கு 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் அல்லாத ஒருவரை நாங்கள் முதல்வராக்குவோம்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் உட்பட 5 ஊழல் அமைச்சர்களை நீக்கிவிட்டு இளைஞர்களை நியமிப்போம். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசு வெற்றி பெறாது.
இவ்வாறு திவாகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications