ராமமோகன் ராவின் ஆந்திரா வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட 44 கிலோ தங்கம் சிக்கியது!

ராமமோகன்ராவின் சித்தூர், விஜயவாடா வீடுகளில் 44 கிலோ தங்கம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சித்தூர்/விஜயவாடா: தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவின் ஆந்திரா வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட 44 கிலோ தங்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

44 kg gold from TN Chief Secretary residences

வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவிடம் சிக்கியுள்ள கான்டிராக்டர் சேகர் ரெட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமமோகன் ராவ் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள ராமமோகன் ராவ் வீடுகளிலும் இச்சோதனை நடைபெறுகிறது,

ராமமோகன் ராவின் விஜயவாடா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. அதேபோல் சித்தூரில் உள்ள ராமமோகன் ராவின் வீட்டில் ரூ26 லட்சம் ரொக்கம் மற்றும் 4 கிலோ தங்கம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே சேகர் ரெட்டி வீட்டில் ரூ171 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கம் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+