For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல சொகுசு பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

பல சொகுசு பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: பல சொகுசு பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

தமிழகம் முழுக்க பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இந்த திடீர் போக்குவரத்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

498 Deluxe and Express will run as a ordinary bus - TN Govt

இந்த நிலையில் மக்களின் கஷ்டத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி சொகுசு பேருந்துகள் பலவற்றை சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றி இருக்கிறது.

அதன் அறிக்கையில் ''498 விரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் சாதாரண மற்றும் விரைவு கட்டண பேருந்துகளாக மாற்றம் செய்யப்படும். பொதுமக்கள் கஷ்டம் கருதி கட்டண முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது'' என்று கூறியுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு காரணமாக சில பேருந்துகளில் கட்டணம் குறையும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

English summary
Tamilnadu government says 498 Deluxe and Express will run as a ordinary bus here after. Inorder decrease the people's problem after the hike in bus fare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X