அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரத்தில் விபத்து: 5 அதிமுகவினர் படுகாயம்
தேனி: தேனி அருகே அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் காரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற அதிமுகவினர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்
தேனி லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கம்பம் செல்வதற்காக வந்தார். இவரது பிரசார காரை பின் தொடர்ந்து இளைஞர் பாசறை அமைப்பினர் சென்றனர். உத்தமபாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது மோட்டார் சைக்கிளை ஓட்டினார். இதில் தேவாரத்தை சேர்ந்த பிரபஞ்சன் வண்டியின் பின்னால் அமர்ந்து இருந்தார்.
இவர்களை தொடர்ந்து தேவாரத்தை சேர்ந்த விவேக் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். இவர்கள் அ.தி.மு.க. கொடிகளுடன் காக்கில்சிக்கையன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது மோதினர்.
இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிவந்த சாயத்தா, அதில் சவாரி செய்த சையது அபுதாகீர், இளைஞர் பாசறையை சேர்ந்த சாகுல் அமீது, விவேக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications