பெண்ணை ஆபாச படமெடுத்து மிரட்டிய நாகராஜ்... பாபநாசம் பாணியில் கொன்ற காமராஜ்
நாமக்கல்லில் இளம்பெண்ணை ஆபாசமாக படமெடுத்து ஆசைக்கு இணங்க அழைந்த நபரை அந்த பெண்ணின் கணவர் கொலை செய்தார்.
Recommended Video

நாமக்கல்: பாபநாசம் சினிமா பாணியில் இளம்பெண் குளித்துக்கொண்டிருந்ததை வீடியோ எடுத்து அவரை ஆசைக்கு இணங்க அழைத்த நபரை அந்த பெண்ணின் கணவன் கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் ஹைகூல் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ்,42 தறிப்பட்டறை தொழிலாளி. தன்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் பெண் குளித்தபோது அதனை படம் எடுத்து அவரை தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவர் காமராஜிடம் அழுது கொண்டே கூறினார். உடனே காமராஜ் நாகராஜியிடம் சென்று சண்டை போட்டார். இதையடுத்து இருதரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

நாகராஜை தாக்கிய நண்பர்கள்
நாகராஜின் நடவடிக்கையைப் பற்றி தனது நண்பர்களிடம் தெரிவித்தார் காமராஜ். அனைவரும் சேர்ந்து நாகராஜை தாக்கியுள்ளனர். அதே நாளில் டாஸ்மாக் கடைக்கு காமராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மதுகுடிக்க சென்றபோது நாகராஜூம் அங்கு வந்துள்ளார்.

காமராஜ் கொடுத்த மரணஅடி
அவரை கண்டதும் ஆத்திரம் அடைந்த காமராஜ், நண்பர்களுடன் சென்று நாகராஜை மீண்டும் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலை வழக்கு பதிவு
இந்த கொலை தொடர்பாக நாகராஜ் மனைவி ஜமுனா, அளித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜ், இவரது உறவினர் மோகன்ராஜ் மற்றும் நண்பர்கள் காந்திபுரம் பகுதியை சேர்ந்த காட்டூர் தினேஷ் குமார், குமாரபாளையம், விட்டலபுரி பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மீனாட்சி சுந்தரம், அதே பகுதியை சேர்ந்த ஜீவா ஆகியோரை கைது செய்தனர்.

மிரட்டிய நாகராஜ்
கைதான காமராஜ் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது வீட்டின் அருகே வசித்து வந்தவர் நாகராஜ். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனது மனைவி வீட்டின் அருகே குளித்தபோது அதனை நாகராஜ் ரகசியமாக செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அந்த காட்சிகளை காட்டி எனது மனைவியிடம் தகராறு செய்தார். ஆசைக்கு இணங்குமாறு அழைத்தார்.

மெமரி கார்டில் பதிவு
இதற்கு எனது மனைவி மறுத்தால் ஊரில் உள்ள மற்றவர்களின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் இந்த காட்சிகளை அனுப்பி விடுவேன் என கூறினார். இதனால் பயந்து போன எனது மனைவி என்னிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். நான், நாகராஜிடம் செல்போனில் பதிவு செய்த அந்த ஆபாச காட்சிகளை உடனடியாக அழித்து விடும்படியும், செல்போனில் உள்ள அந்த மெமரி கார்டை எடுத்து தருமாறும் கேட்டேன். ஆனால், அவர் மெமரி கார்டை தர மறுத்தார்.

செல்போன் தர மறுப்பு
இதனால் கோபம் அடைந்த நான் எனது நண்பர்களிடம் கூறினார். அவர்கள் நாகராஜை தாக்கினர். டாஸ்மாக் கடைக்கு சென்றோம். அங்கு நாகராஜூம் வந்தார். எனது மனைவியை ஆபாச படம் எடுத்து விட்டானே என ஆத்திரத்தில் இருந்த நான், அவரை அழைத்து சென்று டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள மணி என்பவருடைய தோட்டத்தில் வைத்து செல்போனையும், மெமரி கார்டையும் தருமாறு கேட்டேன். அப்போது நாகராஜ் மெமரி கார்டை உடைத்து கொடுத்தார்.

உயிரிழந்த காமராஜ்
நாகராஜிக்கும் எங்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது மாறி மாறி அடித்ததில் நாகராஜ் பலத்த காயம் அடைந்து கீழே சரிந்தார். பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டோம். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். போலீசார் விசாரணையில் நாங்கள் மாட்டிக்கொண்டோம் என்று காமராஜ் கூறினார். கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications