சென்னை சென்ட்ரல் அருகே கோவை சதாப்தி ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன! பயணிகள் பெரும் அவதி!!
சென்னை: சென்னை சென்ட்ரல் அருகே பணிமனையில் இருந்து ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த கோவை சதாப்தி ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் கோவை செல்ல வேண்டிய பயணிகள் 3 மணிநேரம் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்ட்ரலில் இருந்து காலை 7.15 மணிக்கு கோவைக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு செல்லும். முற்றிலும் ஏ.சி.சேர் வசதி கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு காலை டிபன், மதியம் சாப்பாடு போன்றவை வழங்கப்படும்.

சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் மட்டும் சதாப்தி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் காலை 6.15 மணியளவில் பணிமனையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அப்போது பேசின் பிரிட்ஜ் அருகே அந்த ரயில் வரும்போது அதன் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. ரயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்துக்கான தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட தகவல் பயணிகளுக்கு தாமதமாக தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் ஆவேசம் அடைந்தனர். ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ரயில் எத்தனை மணிக்கு புறப்படும், என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற எந்த தகவலும் கிடைக்காமல் சிறிது நேரம் பயணிகள் தவித்தனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டது. சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் தாமதமாக காலை 10.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் 3 மணி நேரம் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். பின்னர் 10.30 மணிக்கு கோவைக்கு சதாப்தி ரயில் புறப்பட்டுச் சென்றது.
மீண்டும் மீண்டும்..
கடந்த 17-ந் தேதி அதிகாலை 4.30 மணியளவில் பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே வந்த போது தடம்புரண்டன. இந்நிலையில், இன்று மீண்டும் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications