வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை- பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காதாம்!
சென்னை: வங்கிகளுக்கு வரும் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை வந்தாலும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆயுத பூஜை, விஜய தசமி, மொஹரம் விடுமுறைகளை தொடர்ந்து அடுத்த வாரம் 5 நாட்கள் பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு துறை நிறுவனங்களுக்கு விடுமுறையாகும்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம், "தமிழகத்தில் வங்கி வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. இருப்பினும் மக்களின் வசதிக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் இயங்கும்" என்று அவர் கூறினார்.
மேலும் பணம் போடுவதற்கான மின்னணு சேவை மையங்கள் முழு அளவில் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஏடிஎம்களில் தேவையான அளவுக்கு பணத்தை வைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வங்கிகளை கேட்டு கொண்டிருப்பதாக வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications