Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வியப்பூட்டுது செங்கல்பட்டு.. 19ம் தேதி தேர்தல், மறுநாளே ரெடியா இருங்க மக்களே.. கலெக்டர் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க போகிறது.. அந்தவகையில் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாவட்டந்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

5 Discount for Hotel Restaurants for Voters on April 19 Surprise announcement by Chengalpattu Collector

விழிப்புணர்வு: 100 சதவீத வாக்குப்பதிவு கோரி, புதுவிதமான சலுகைகளையும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன. இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். பஸ் ஸ்டாண்டு , ரயில்வே ஸ்டேஷன் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு வடிவங்களில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்திலும் அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை, சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் -- தனி, மதுராந்தகம் -- தனி ஆகிய சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வாக்குப்பதிவு குறைவாக பதிவாகிறது.

தள்ளுபடி:
எனவே, இதனை அதிகரிக்கும் வகையில் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், 19ம் தேதியன்று, ஓட்டுப்போட்டால், மறுநாள் ஓட்டல்களில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்...

அதாவது, ஏப்ரல் 19-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் ஏப்ரல் 20-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உணவகங்களுக்கும், மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களுக்கும் சாப்பிடச் செல்லும் வாக்காளர்களின், தங்கள் விரலில் மை இடப்பட்டிருப்பதை காட்டினால், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு அதிரடி ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி 5% வரி தள்ளுபடி செய்யப்படும்.

கலெக்டர்:
இந்த தொகுதியில் 100% வாக்குப் பதிவானதை அனைத்து வாக்காளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.. பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இந்த இந்த அறிவிப்பானது, மாவட்ட மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அத்துடன், பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+