Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனவர்கள் ஐவரும் சொந்த ஊர் வந்து சேர்ந்தனர்! தோளில் தூக்கி வைத்து உறவினர்கள் ஊர்வலம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் டெல்லியிலிருந்து விமானம் மூலம் நள்ளிரவு சென்னை வந்து இன்று மதியம் தங்களது சொந்த ஊரான தங்கச்சி மடம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு ஊர்மக்கள், உற்றார், உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

போதை மருந்து கடத்தியதாக கூறி, இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோருக்கு அதிபர் ராஜபக்சே, இரு நாட்களுக்கு முன்பு பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.

அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் நேற்று விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டனர். டெல்லியில் அவர்கள், வெளியுறவுத் துறை நடைமுறைகளை முடித்துக் கொண்டு சென்னைக்கு நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க 5 மீனவர்களையும் வரவேற்றனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக அமைச்சர்கள், வளர்மதி, சுந்தரராஜ், ஜெயபால் ஆகியோரும் 5 மீனவர்களை நேரில் வரவேற்றனர்.

5 fishermen reaches their home town Thangachimadam

இதன்பிறகு, மீனவர்கள் 5 பேரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து இன்று நன்பகல் 12 மணியளவில் அவர்கள் சொந்த ஊரான தங்கச்சி மடம் சென்று அடைந்தனர். ஊர்க்காரர்களும், உறவினர்களும் மீனவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மீனவர்களை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஊர்வலம் சென்றனர், பொன்னாடைகளை போர்த்தினர், மாலைகளை சூடினர்.

5 fishermen reaches their home town Thangachimadam

பலரும் உணர்ச்சி மிகுதியால் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆயிரம் வாலா சரவெடிகளின் சத்தத்தால் தங்கச்சிமடமே கோலாகலம் கண்டது. வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாக்களின் பிரதிநிதிகளும் தங்கச்சி மடத்தில் குவிந்துள்ளன.

மீன் கொடுத்து கொண்டாடிய தமிழக பாஜக

உலக மீனவர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. தூக்கு கயிற்றில் இருந்து 5 மீனவர்கள் விடுதலையானதையொட்டி பாரதிய ஜனதா கட்சியினர் நூதனமான முறையில் இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடினார்கள்.

5 fishermen reaches their home town Thangachimadam

சென்னை விவேகானந்தா இல்லம் அருகே ‘‘மீன் உணவு உண்ணும் விழா'' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. விழா பந்தலில் வஞ்சீரம், மாவலாதி, சங்கரா, அயிரை, இரால், நண்டு, நெத்திலி, கணவாய் ஆகிய 8 விதமான மீன்கள் வறுத்து வைக்கப்பட்டு இருந்தது. சராசரியாக ஒவ்வொரு வகை மீனிலும் 200 கிலோவுக்கு குறையாமல் வறுத்து வைக்கப்பட்டு இருந்த இந்த மீன் வாசனை அந்த பகுதியில் கமகமத்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில பாரதிய ஜனதா மீனவர் அணி செயலாளர் சதீஷ் செய்து இருந்தார். விழாவை தொடங்கி வைத்து மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொது மக்களுக்கு மீன் உணவுகளை இலவசமாக வழங்கினார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விதவிதமான மீன்களை ருசித்து மகிழ்ந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+