செங்கோட்டை: அரசுப் பேருந்து- கார் மோதி விபத்து ஐவர் பலி; ஏழுபேர் படுகாயம்
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கொட்டாகுளம் கிராமத்தில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
படு காயமடைந்த ஏழுபேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மடுரியாருகேயுள்ள கொட்டாம் என்ற ஊரைச் சார்ந்த பழனி, பச்சியப்பன், செல்வம், சவுகத் அலி, செல்வராஜ், ராஜ்குமார், பன்னீர் செல்வம், இவர்கள் 7 பேரும் நேற்று குற்றாலம் வந்துகுளித்துவிட்டு இரவில் பிரானூர் பார்டரில் உணவருந்திவிட்டு இரவு 11மணியளவில் ஊருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் காரை வேகமாக ஒட்டி சென்றுள்ளனர்.அப்போது செங்கோட்டை அருகேயுள்ள கொட்டாகுளம் எனும் ஊரின் அருகே உள்ள இசக்கியம்மன் கோவில் தாண்டி வளைவில் வேகமாக திரும்பிய மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு அரசு பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது.எதிர்பாராத விதம் கார் பேருந்து மீது மோதியது.
இதில் காரிலிருந்த பழனி, பச்சியப்பன், செல்வம், சவுகத் அலி, செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
படு காயமடைந்த ராஜ்குமார், பன்னீர் செல்வம் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதேபோல், பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்த செங்கோட்டை, குற்றாலம், போலீசாரும் தீயணைப்புத்துறையினரும் விரைந்து வந்து காயம்பட்டவர்களை, அரசு மருத்துவமனைக்கும், இறந்தவர்களை தென்காசி மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனர்.
தொடரும் உயிர் பலி
சம்பவம் நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் 15க்கும் மேற்ப்பட்டோர் விபத்தில் பலியாகியுள்ளனர். மோசமான வளைவுப் பகுதி திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சாலையை அகலப்படுத்த போதிய இடமிருந்தும், மின்விளக்கு வசதி, ஆபத்தான பகுதியென அறிவிப்பு பலகை இப்படி எதுவும் இப்பகுதியில் இல்லை என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாகும். அதிகாரிகள் தனியார் ஆக்கிரமித்திருக்கும் பகுதியை விரிவுப்படுத்த முன்வராமல் உள்ளதே விபத்துதொடர என வாகன ஓட்டிகள் புகார் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications