ரேசன் பொருட்கள் கடத்தி விற்பனை- 5 பேர் அதிரடி கைது
நெல்லை: நெல்லை அருகே ரேசன் கடையில் இருந்து பொருட்களை அபேஸ் செய்து விற்பனை செய்ய இருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
சேரன்மகாதேவியை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அம்பாசமுத்திரம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து லாரிகளில் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அவ்வாறு லாரியில் ரேஷன் பொருட்களை கொண்டு செல்லும் போது சிலர் சாக்குகளில் துளையிட்டு பொருட்களை திருடிச் செல்வதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.

இந்நிலையில் சேரன் மகாதேவியை அடுத்த புதுக்குடியில் உள்ள ரேஷன் கடைக்கு வந்த லாரியில் அதன் டிரைவர் மற்றும் சிலர் சேர்ந்து ரேஷன் பொருட்களை திருடி பதுக்கி வைத்திருப்பதாக சப் கலெக்டர் விஷ்ணுவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப் கலெக்டர் விஷ்ணு புதுக்குடிக்கு சென்று லாரியை சோதனையிட்டார்.
அப்போது டிரைவரின் இருக்கைக்கு அடியில் 10 கிலோ ரேஷன் பருப்பு மற்றும் 24 கிலோ சீனி ஆகியவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து வீரவநல்லூர் போலீசில் ஒப்படைத்தார்.
மேலும் பொருட்களை திருடியதாக லாரி டிரைவர் அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தையை சேர்ந்த இசக்கி, வைராவிகுளத்தை சேர்ந்த சுப்பிரமணியன், வாகைகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மசூதுசேட், கோடரங்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ், வாகைகுளம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications