திருச்சி அருகே... கல்லூரி பஸ் மீது வேன் மோதி நாகூர் தர்கா சென்ற 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
முசிறி அருகே டெம்போ வேனும், தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் இன்று காலை 7.30 மணியளவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த பயங்கர விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சேலத்தில் இருந்து நாகூருக்கு 4 டெம்போ வேன்களில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை 7.30 மணியளவில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த காரை, டெம்போ முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த தோழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கியது. டெம்போ வேன் ஓட்டுநர் உட்பட 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications