தமிழகம், புதுச்சேரியில் மே 16ல் சட்டசபைத் தேர்தல்!: 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை
சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் தேதி நடக்கிறது. இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று டெல்லியில் தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதாகவும் ஜைதி அறிவித்தார். தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுத்தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.

வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 30ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற மே 2ம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாள் ஆகும். மே 16ம் தேதி (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும். மே 19ம் தேதி (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அதே போல புதுச்சேரியிலிலுள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி தவிர கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, தேர்தல் தேதி தொடர்பாக, இந்த 5 மாநில தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய தேர்தல் ஆணையர் கருத்து கேட்டு வந்தார். டெல்லியில் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டமும் நடந்தது.
இந்நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார், தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி. அப்போது அவர் அளித்த பேட்டி:
- தமிழகத்தில் 65,616 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்
- புதுவையில் 913 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்
- தமிழகத்தில் மொத்தம் 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
- வாக்கு இயந்திரத்தில் நோட்டாவுக்கு தனி சின்னம் பொருத்தப்பட உள்ளது.
- குழப்பத்தை தவிர்க்க, கட்சிகளின் சின்னத்தோடு சேர்த்து, வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும்.
- ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்து மகளிர் வாக்குச் சாவடி அமைக்கப்படும்.
தமிழக அரசின் பதவி காலம் மே மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications