கடலில் குளிக்கப் போன 5 பெண்கள் நீரில் மூழ்கி பலி.. சாயல்குடியில் துயரம்!
சாயல்குடி, ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடலில் குளிக்கப் போன 5 பெண்கள் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 5 பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் உயிரிழந்துள்ளனர்.
சாயல்குடி அருகே தெற்குநரிப்பையூரை சேர்ந்த முகமது ரபீக் என்பவரின் மனைவி ஜீமத் பசரியா (40). இவர்களது மகள் இஸ்மத் (18). இவர்களின் உறவினர்களான, இதே பகுதியைச் சேர்ந்த சீனி அபுல் மனைவி செய்யது காதர் பீவி (45), இவரது மகள் அராபத் (20), சீனி அபுலின் சகோதரர் முஸ்தாக் மனைவி ரமீலா (23). இவர்கள் 5 பேரும் நேற்று மதியம் குழந்தைகளுடன் நரிப்பையூர் அருகே ஐந்து ஏக்கர் கடல்பகுதியில் உள்ள காதர் சாகிப் தர்காவிற்கு சென்றனர்.

இந்தப் பகுதி கடற்பாசிகள் நிறைந்த அழகான பகுதியாகும். அடிக்கடி சினிமா படப்பிடிப்பும் இங்கு நடக்குமாம். இதனால் இங்குள்ள கடற்பகுதியைச் சுற்றிப் பார்க்க பலரும் வருவர். பிற்பகல் 2.45 மணியளவில் காதர் சாகிப் தர்காவில் பிரார்த்தனை நடந்து முடிந்ததும், ஐந்து பெண்களும் குழந்தைகளுடன் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். குழந்தைகளை கரையில் விட்டு விட்டு பெண்கள் மட்டும் குளித்துள்ளனர். அப்போது திடீரென ஐந்து பேரும் அலையில் சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாது. இதனால் நீரில் மூழ்கி விட்டனர்.
இதைப் பார்த்து கரையில் இருந்த குழந்தைகள் அலறியுள்ளனர். அதைப் பார்த்து அங்கிருந்த மீனவர்கள் ஓடி வந்து பெண்களைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், பசரியா, இஸ்மத், காதர் பீவி, அராபத், ரமீலா ஆகிய 5 பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மீட்பில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் கூறுகையில், குழந்தைகளின் அலறல் கேட்டு ஓடிவந்தோம். அப்போது 5 பெண்களும் கடல் நீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். 4 பேரை உயிரிழந்த நிலையில்தான் மீட்டோம். ஒருவருக்கு மட்டும் உயிர் இருந்தது. அவரும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications