வேலூரில் 6 வயது உறவுக்கார சிறுமியை பலாத்காரம் செய்த 51 வயது நபர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் உறவுக்காரரின் 6 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் உள்ள சிவராஜ் நகரைச் சேர்ந்தவர் எம. முருகன்(51). அவர் தனது உறவினரின் 6 வயது மகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்று அவர் சிறுமியை மிரட்டியுள்ளார்.

51-year-old Molests Relative's Child in Vellore

மறுநாள் காலையில் சிறுமி தனது பெற்றோரிடம் முருகன் செய்தது பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜனார்தனியிடம் புகார் அளித்தனர்.

வீட்டில் இரவு நேரத்தில் தனக்கு அருகில் படுத்திருந்த எங்கள் மகளை முருகன் பலாத்காரம் செய்துவிட்டார் என அவர்கள் தங்களின் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். அவர்களின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் முருகனை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+