வேலூர்: சாக்லேட் கொடுத்து 3 வயது சிறுமியை சீரழித்த 55 வயது காமுகன் தலைமறைவு
ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே மூன்று வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த காமுகனை போலீசார் தேடி வருகின்றனர். கோவிந்தசாமி (55) என்ற அந்த காமுகன் ராணிப்பேட்டை அருகே மலைமேடு பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளான்.
அவனது கடைக்கு கூலித்தொழிலாளி ஒருவரின் மூன்று வயது மகள் கடந்த ஞாயிறன்று இரவு 8 மணிக்கு மளிகைக்கடை அருகே தனது பாட்டி வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த சிறுமியை அழைத்து சாக்லெட் கொடுத்து விளையாடிய கோவிந்தசாமி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விளையாடப்போன சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததைக் கண்ட சிறுமியின் அத்தை மளிகைக்கடைக்கு சென்று தேடியுள்ளார்.
கோவிந்தசாமியின் வீட்டிற்குள் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்கவே கதவை வேகமாக தட்டியுள்ளார். இதனையடுத்து சிறுமியை விட்டுவிட்டு கோவிந்தசாமி தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து சிறுமியை அழைத்துக்கொண்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். இதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் கோவிந்தசாமியின் மீது மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு மனைவியுடன் தலைமறைவான கோவிந்தசாமியை தேடி வருகின்றனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications