2000 ரூபாய் நோட்டு முடிவுக்கு வந்த கதை! சில்லரை மாற்ற பட்ட பாடு ஞாபகம் இருக்கா? வந்த வேகத்தில் அவுட்

Subscribe to Oneindia Tamil

சென்னை : 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. அப்போது 2000 ரூபாய் நோட்டுகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் ரூ.2000 நோட்டுகள் புழக்கம் வெகுவாகக் குறைந்தது. தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2016 நவம்பர் 8 : 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டன.

6 and half years stoty of 2000 rupees note: Launch to end timeline

2016 நவம்பர் 12 : பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 4 நாட்களில் 2,000 ரூபாய் நோட்டு அறிமுகமானது. எந்த வங்கிக்குப் போனாலும், ஏ.டி.எம் மையத்துக்குப் போனாலும் 2,000 ரூபாய்த் தாளாகவே இருந்தன. அதனை சில்லறை மாற்றுவதே பெரும் பாடாக இருந்தது.

இந்தியாவின் மொத்த பண சுழற்சியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளே 68 சதவீதம் இருந்தன. அதன் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய். அவற்றைப் புதிய 500, 1000 ரூபாய் தாள்களாக மாற்ற வேண்டும் என்றால், அச்சிடுவதற்கே மாதக்கணக்கில் டைம் எடுக்கும் என்பதால் 2000 நோட்டுகள் அறிமுகமாகின. 500, 2,000 ரூபாய் நோட்டுகளாக அச்சிட்டால், 50 நாட்களுக்குள் அச்சிட்டுவிடலாம் என்ற அடிப்படையில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

2017 : 2016-17 நிதியாண்டில் 354.2991 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன.

2017-18 நிதியாண்டில் வெறும் 11.1507 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டன.

2018-19 ஆம் நிதியாண்டில் அது மேலும் குறைந்து வெறும் 4.669 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டன.

2017 மார்ச் 31 : 2017 மார்ச் 31 நிலவரப்படி, நாட்டின் பொருளாதாரத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு 50.2 சதவிகிதமாக இருந்தது.

2018 மார்ச் 30 : 336 கோடி எண்ணிக்கையிலான் ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

2019 : அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆண்டுகளிலேயே 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வெகுவாகக் குறைந்தது. வங்கிகளிலும், ஏடிஎம்-களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை.

2020 மார்ச் : 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 274 கோடி எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

2021 பிப்ரவரி 26 : 2021 பிப்ரவரி 26 நிலவரப்படி 249 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

2022 மார்ச் : 2022 ஆம் ஆண்டு மார்ச் 31இல் 2,000 ரூபாய் நோட்டுகள் சதவிகிதம் 13.8ஆக சரிந்தது. ரூ. 31.05 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்த ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட், 2019ஆம் ஆண்டு முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்படவில்லை எனத் தெரிவித்தது.

2022 டிசம்பர் : 2,000 ரூபாய் நோட்டுகளை ஒரேயடியாக செல்லாததாக்கப்படக்கூடாது, படிப்படியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ராஜ்யசபாவில் முன்வைக்கப்பட்டது.

6 and half years stoty of 2000 rupees note: Launch to end timeline

2023 மே 5 : புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மே 23 ஆம் தேதியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைக்கலாம் என்றும் தினமும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள செப்.30 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அறிமுகமான 2000 ரூபாய் நோட்டுகள் அடுத்த ஆறரை ஆண்டு காலத்தில் விடைபெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+