கடின வினாத்தாள்... வேதியியல் பாடத்துக்கு மட்டும் 6 கருணை மதிப்பெண்கள்!
சென்னை: பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் 6 வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிளஸ்-2 வேதியியல் தேர்வு கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சில மிகக் கடினமாக இருந்ததாகவும், கடந்த 10 ஆண்டுகளில் கேட்கப்படாத கேள்விகள் என்றும் வருந்தினர் பல மாணவர்கள். சிலர் தற்கொலை முயற்சிகளில் இறங்கியதாகவும் கூறப்பட்டது.

எனவே, வேதியியல் தேர்வை மீண்டும் நடத்தவேண்டும் என்று பல மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் வேதியியல் பாடத்துக்கு மட்டும் 6 கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவெடுத்துள்ளது கல்வித் துறை.
இதுகுறித்து வெளியாகியுள்ள பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ப்ளஸ்-2 வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 17-வது வினா சரியாக கேட்கப்படவில்லை.
மேலும் 5 மதிப்பெண் கேள்வியில் 70-ம் எண் கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருந்தது. கேள்வியில் 11 என்று இருப்பதற்கு பதிலாக ரோமன் எழுத்தில் கேட்கப்பட்டு இருந்தது. ரோமன் எழுத்தில் இரண்டு என்றால் அது கால்சியத்தை குறிக்கும். ரோமன் எழுத்து அல்லாமல் 11 என்றால் அது காப்பரை குறிக்கும்.
இந்த இரு வினாக்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் 1 + 5 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. மொத்தத்தில் 6 மதிப்பெண்கள் கிடைக்கும்," என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications