கரூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: நீதிபதி உள்பட 6 பேர் பலி
கரூர்: கரூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு நீதிபதி உள்பட 6 பேர் பலியாகினர்.
சேலம் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பிரகாஷ். இவர் தனது நண்பர் டாக்டர் பிரதீப் குமாருடன் சேர்ந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அரவக்குறிச்சியை அடுத்த புங்கம்பாடி பிரிவு சாலையில் கார் சென்ற போது, காரின் டயர் திடீரென வெடித்து சாலை தடுப்பை உடைப்பை உடைத்துக் கொண்டு சீறிப்பாய்ந்தது. அப்போது எதிர் திசையில் வேடசந்தூரில் இருந்து பரமத்தி வேலூரை நோக்கி சென்ற கார் மீது நீதிபதியின் கார் பலமாக மோதியது.
இதில், நீதிபதி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நீதிபதியின் காரை ஓட்டி வந்த டாக்டர் பிரதீப்குமார் உள்பட 5 பேர் படுகாயங்களுடன் கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மற்ற 3 பெண்கள் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் வேடசந்தூரை அடுத்த கேதை அரும்பு என்ற இடத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இறந்தவரின் சாம்பலை காவிரியில் கரைக்க கொடுமுடிக்கு சென்ற போது இந்த கோர விபத்து நேர்ந்தது.












Click it and Unblock the Notifications