ஐகோர்ட் நீதிபதிகளாக 6 பேர் இன்று பதவி ஏற்பு.. இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக 6 பேர் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். இதனையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்த அப்துல் குத்தாஸ், தண்டபாணி, ஆதிகேசவலுவும், பவானிசுப்புராயன், ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றனர்.
இவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.

காலிப் பணியிடங்கள்
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையோடு சேர்த்து மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75-ஆக இருக்க வேண்டும். ஆனால் நீதிபதிகளின் எண்ணிக்கை 48ஆக இருந்த நிலையில், காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

பரிந்துரை
இதனையடுத்து, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வரும் எம்.தண்டபாணி, பவானி சுப்புராயன், ஜெகதீஷ் சந்திரா, ஆதிகேசவலு, அப்துல் குத்தூஸ், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகிய 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குழு பரிந்துரை செய்தது.

உத்தரவு
உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட அந்த பரிந்தரை பட்டியல், சட்ட அமைச்சகத்தின் மூலம் பிரதமர் அலுவலத்திற்கு அனுப்பப்பட்டது. பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களது நியமனத்திற்கான உத்தரவை கடந்த 22ம் தேதி பிறப்பித்தார்.

பதவி ஏற்பு
இதனையடுத்து, இன்று பதவி ஏற்பு நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. தற்போது 6 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் மீதம் உள்ள 21 பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications