68-வது சுதந்திர தினவிழா: புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் 68 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் ,இன்று தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்

அதனைத் தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றும் அவர், கல்பனா சாவ்லா விருது உட்பட பல விருதுகளை வழங்கி சாதனையாளர்களை கவுரவிக்க உள்ளார்.

நாட்டின் 68 வது சுதந்திரதினம் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், முதல்வர் ஜெயலலிதாமலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

68 Independence day TN CM Jayalalitha Flag hoisting

அங்கிருந்து மோட்டார் சைக்கிள் புடைசூழ முதல்வர் ஜெயலலிதாவை காவல்துறையினர் ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்து சென்றனர்.

புனித ஜார்ஜ் கோட்டை எதிரேஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வரவேற்றார். பின்னர் முப்படை தளபதிகள், கடலோர காவற்படை அதிகாரி,டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் அங்கிருக்கும் மேடையில்இருந்தபடி, ஏற்றுக்கொண்டார். திறந்த ஜீப்பில் பயணித்து போலீஸ் அணிவகுப்பை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டார்.

பின்னர் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

தலைமைச் செயலகத்தின் எதிரே ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலக பகுதியில் ஒரு கூடுதல் ஆணையர், 4 இணை ஆணையர்கள், 9 துணை ஆணையர்கள் தலைமையில் சுமார் 2,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் மட்டும் 22 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே, ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+