தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 7 சதவீதமாக உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 7 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு !!

    சென்னை: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு இந்த அகவிலைப்படி உயர்வானது ஊழியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது : அலுவலர் குழு பரிந்துரை பேரில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான சம்பளம், அகவிலைப்படியை திருத்தி கடந்த 11.10.17 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தற்போது வழங்கப்படும் 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக 1.1.18 தேதியில் இருந்து உயர்த்தி 15.3.18 அன்று மத்திய நிதித்துறை உத்தரவிட்டது.

    7 % DA increased for tamilnadu government employees

    மத்திய அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசும் தனது பணியாளர்களுக்கு 1.1.18 அன்றில் இருந்து மாதம் ஒன்றுக்கு 7 சதவீதமாக உயர்த்தி உத்தரவிடுகிறது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை, மின்னணு பரிமாற்ற முறையில் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இந்த அகவிலைப்படி உயர்வை, ஏற்கனவே அகவிலைப்படி உயர்வை பெற்றுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் பெறுவார்கள். பகுதி நேர ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், யு.ஜி.சி.யால் நிர்வகிக்கப்படும் ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர், உடல் கல்வி இயக்குனர்கள், நூலகர்கள், வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள், மதிய உணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+