தேமுதிக வேட்பாளர்கள் தேர்வு: விஜயகாந்திடம் பட்டியலை ஒப்படைத்த சுதீஷ்
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. சுதிஷ் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு வேட்பாளர்களை தேர்வு செய்து தலைவர் விஜயகாந்திடம் அளித்துள்ளனர். இந்த வேட்பாளர்களின் பட்டியலை விரைவில் விஜயகாந்த் வெளியிடுவார் என்று தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 65 நாட்கள் உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. 6 முனை போட்டியை சந்திப்பதால் யாருடைய வாக்கு யாருக்கு விழுமோ என்ற அச்சம் அரசியல் கட்சியினரிடையே எழுந்துள்ளது.

தேமுதிக தனித்து களம் காணப்போவதாகவும், சுதீஷ் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு வேட்பாளர்களை தேர்வு செய்யும் என்றும் சென்னையில் நடைபெற்ற தேமுதிக மகளிரணி மாநாட்டில் விஜயகாந்த் தெரிவித்தார். மேலும் தம்மை கூட்டணிக்கு அழைத்த அனைத்து தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தேமுதிகவில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், கடந்த மாதம் 22ம் தேதி நேர்காணலை நடத்தினார். அவர் கடந்த 1ம் தேதியுடன் நேர்காணலை முடித்தார். தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பட்டியலில் இருந்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கட்சியின் பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் எம்எல்ஏ பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், கட்சியின் பட்டதாரி ஆசிரியர், பேராசிரியர் அணியின் செயலாளர் ரவீந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர், இன்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை துவக்கினர். இதில், தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களை கட்சி தலைவர் விஜயகாந்திடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications