சூலூரில் தொடரும் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்.. தாய்-மகளிடம் கத்திமுனையில் 7 பவுன் நகை கொள்ளை
தாய், மகளிடம் 7 பவுன் நகையை பறித்து முகமூடி கும்பல் அட்டகாசம் செய்துள்ளது.
கோவை: மளிகை கடை சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த தாய், மகளிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற முகமூடி கும்பலை சூலூர் போலீசார் தேடி வருகிறார்கள்.
சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி பிருந்தாவன் கார்டன் பகுதியில் பிரியலதா 36, மற்றும் அவரது மகள் ராகவி நேற்றிரவு மளிகை கடை சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் முகமூடி அணிந்து அங்கு வந்தனர். அவர்களது கையில் கத்தி, அரிவாள் வைத்திருந்தனர்.

பின்னர் தாய், மகளிடம் கத்தியை காட்டி, அவர்கள் அணிந்துள்ள மொத்த நகையையும் கழட்டி தருமாறு மிரட்டினர். ஆனால் நகைகளை தர முடியாது என்று பிரியலதா சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மகும்பல், தாய்-மகளிடம் பயங்கர ஆயுதங்களை காட்டி கத்தி முனையில் ஏழரை பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரியலதா கருமத்தம்பட்டி போலீசில் உடனடியாக புகார் அளித்தார். அதனடிப்படையில் மோப்பமாய், கைரேகை நிபுணர்களுடன் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கும்பல் சூலூர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருபவர்கள் என தெரியவந்தது. அக்கொள்ளையர்களை விரைந்துபிடிக்க வேண்டும் என அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications