குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதத் தாக்குதலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக வரும் 24ம் தேதி முதல் 7 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப் படுவதையொட்டி, இந்தியாவின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பு விமானங்களை கடத்த இருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்லது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை விமான நிலையத்திலும் 7 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

பர்வையாளர்களுக்கு தடை....
சென்னை விமானநிலையத்தில் நேற்று அதிகாலை முதல் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. பார்வையாளர் வருகைக்கு நேற்று அதிகாலை 1 மணி முதல் வரும் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தகுந்த பாதுகாப்பு...
விமானநிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் நுழைவு வாயிலிலேயே நிறுத்தி சோதனையிடப்படுகின்றன. விமானநிலைய நுழை வாயில் மற்றும் விமான ஓடுதளம் அருகிலும் துப்பாக்கி ஏந்திய போலீ சார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு....
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஏர்போர்ட் வளாகத் தில் தீவிர சோதனை நடத்தப் பட்டு வருகிறது. விமான நிலையம் முழுவதும் நவீன கேமராக்கள் பொருத்தப் பட்டு தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வருகிறது.

7 அடுக்கு சோதனை....
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு வழக்கமாக 3 கட்ட சோதனை நடத்தப்படும். அதன்பின்னரே அவர்கள் விமானத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ஆனால், நேற்று முதல் அது 5 கட்ட சோதனையாகவும், வரும் 24ம் தேதி முதல் 7 அடுக்கு பாதுகாப்பாகவும் உயர்த்தப்படுகிறது.

கூடுதல் போலீசார்...
இதற்காக கூடுதலாக 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அவர்களது பணி நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications