தமிழகத்தில் மொத்தம் 73.67% வாக்குகள் பதிவு- 5 தொகுதிகளில் 80%க்கும் அதிகம்!!
சென்னை: தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 73.67% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். தருமபுரி உட்பட 5 தொகுதிகளில் 80%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அன்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், 72.83% வாக்குகள் இதுவரை பதிவாகி இருக்கிறது..இந்த எண்ணிக்கை சற்று கூடும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரவீண்குமார் 39 தொகுதிகளிலும் மொத்தம் 73.67% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதில் ஆண்கள் 73.49%. பெண்கள் 73.85%, மூன்றாம் பாலினத்வர் 12.72% வாக்களித்துள்ளனர்.
தொகுதி வாரியாக வாக்குப் பதிவு இறுதி நிலவரம்:
வடசென்னை 63.95%
மத்திய சென்னை 61.49%
தென்சென்னை 60.04%
காஞ்சிபுரம் 75.91%
திருவள்ளூர் 73.73%
கடலூர் 78.63%
கள்ளக்குறிச்சி 78.26%
விழுப்புரம் 76.09%
சிதம்பரம் 79.61%
ஆரணி 80%
திருவண்ணாமலை 78.08%
தர்மபுரி 81.07%
சேலம் 76.73%
கிருஷ்ணகிரி 77.68%
நாகப்பட்டனம் 77.64%
பெரம்பலூர் 80.02%
மயிலாடுதுறை 75.87%
அரக்கோணம் 77.08%
வேலூர் 74.58%
ஸ்ரீபெரும்புதூர் 66.21%
திருப்பூர் 76.22%
கோவை 68.28%
பொள்ளாச்சி 73.11%
நீலகிரி 73.43%
திருநெல்வேலி 67.68%
தென்காசி 73.06%
தூத்துக்குடி 69.92%
மதுரை 67.88%
ராமநாதபுரம் 68.63%
விருதுநகர் 74.96%
சிவகங்கை 72.83%
கன்னியாகுமரி 67.69%
திருச்சி 70.55%
தஞ்சாவூர் 75.49%
நாமக்கல் 79.64%
ஈரோடு 76.07%
கரூர் 80.55%
திண்டுக்கல் 77.36%
தேனி 75.02
கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மொத்தம் 72.98% வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது அதைவிட சற்று கூடுதலாக வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications