அங்கீகாரமற்ற 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி: தமிழக அரசு
சென்னை: அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கு வரும் ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.
சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை செயல்படுவதற்கு பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழக அரசு முறையாக கடைபிடிக்கவில்லை.

இந்த 746 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் மே 31-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகளை மூட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முன்வரவில்லை. இதனால் இப்பள்ளிகளில் பயிலும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மீண்டும் இதே பள்ளியில் படிப்பைத் தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
2 மாதம் போதிய அவகாசம் இருந்தும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாட்டால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் நாராயணன் ஆஜராகி தனது கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க ஏற்கெனவே ஜூன் 30 வரை தனி நீதிபதி காலஅவகாசம் கொடுத்துள்ளார். எனவே ஜூன் 30 வரை இப்பள்ளிகளுக்கு தற்காலிக காலநீட்டிப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ஒரு பிரச்சினைக்கு இயந்திர கதியில் தீர்வு காண முடியாது. 5 லட்சம் மாணவர்களின் நலன் தொடர்பான பிரச்சினை இது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு குறைபாடுகளைக் களைய உரிய தேதிக்கு முன்பாகவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications