இடைத் தேர்தல்: 750 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஸ்ரீரங்கம் பயணம்!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாகியுள்ளது. வாக்குப் பதிவுக்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தற்போது ஸ்ரீரங்கத்திற்குப் பயணமாகத் தொடங்கியுள்ளன.
இன்று சேலத்திலிருந்து 750 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஸ்ரீரங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டசபை உறுப்பினர் பதவி பறிபோனது. அவர் மொத்தம் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வென்ற ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் நேற்று இடைத் தேர்தலுக்கான தேதியை தலைமைத் தேர்தல் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் நேற்று அறிவித்தார். அதன்படி பிப்ரவரி 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 19ம் தேதி தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 27ம் தேதியாகும். மனுக்கள் ஜனவரி 28ம் தேதி பரிசீலிக்கப்பட்டு, வாபஸ் பெற ஜனவரி 30ம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு பிப்ரவரி 13ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 16ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 750 இயந்திரங்கள் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்காக இன்று பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications