கூவத்தூரில் எங்க எம்எல்ஏ கும்மாளம் போட்டது தப்புதான்...82% பேர் கருத்து- தந்தி டிவி கருத்து கணிப்பு

இக்கட்டான அரசியல் சூழலில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடுத்த முடிவு தவறானது என்று 82% பேர் கருத்து கூறியுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இக்கட்டான அரசியல் சூழலில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடுத்த முடிவு தவறானது என்று 82% பேர் கருத்து கூறியுள்ளனர். அதே நேரத்தில் ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் எடுத்த முடிவு சரியானது என்று 79 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது ஒருபுறம் இருக்க, அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. சசிகலா அணியில் 122 எம்எல்ஏக்களும், ஒபிஎஸ் அணியில் 12 எம்எல்எக்களும் உள்ளனர்.

பத்துக்கும் மேற்பட்ட எம்பிக்களும் ஒபிஎஸ் அணியில் உள்ளனர். இரு அணிகளுமே இரட்டை இலை கேட்டதால் சின்னமும், கட்சியும் முடக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் வேறு வேறு சின்னத்தில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன.

தந்தி டிவி கருத்துக்கணிப்பு

தந்தி டிவி கருத்துக்கணிப்பு

தமிழக அரசியலில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து தந்தி டி.வி. கருத்து கணிப்பு நடத்தியது. இதற்காக தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு நடத்தியது.

மக்கள் ஆதரவு

மக்கள் ஆதரவு

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, தற்போது வரையிலான அரசியல் நிலவரம் குறித்து மக்களிடம் கேள்விகள் எழுப்பி பதில்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த கருத்துக்கணிப்பில் தொகுதிக்கு 75 பேர் வீதம் 234 தொகுதிகளில் மொத்தம் 17 ஆயிரத்து 550 பேரிடம் பதில்கள் பெறப்பட்டன. அதிமுகவின் இன்றைய நிலை, எம்எல்ஏக்களின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. தினகரன் ஆதரவு நிலை எம்எல்ஏக்கள், ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளிலும் தனித்தனியாக கேள்விகள் கேட்கப்பட்டன. ஓபிஎஸ் எம்எல்ஏக்களுக்கே மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

தவறான முடிவு

தவறான முடிவு

உங்கள் எம்எல்ஏ எடுத்த முடிவு சரியா என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தொகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு தவறான முடிவு என்று 82% பேர் கருத்து கூறியுள்ளனர். சரியான முடிவு என்று 12% பேர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர். கருத்து இல்லை என்று 6% பேர் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ்க்கு 79% பேர் ஆதரவு

ஓபிஎஸ்க்கு 79% பேர் ஆதரவு

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தொகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு எம்எல்ஏக்கள் எடுத்த முடிவு சரியான முடிவு என்று 79% பேர் கருத்து கூறியுள்ளனர். தவறான முடிவு என்று 13% பேரும், கருத்து இல்லை என்று 8% பேரும் தெரிவித்துள்ளனர்.

மக்கள் ஒபிஎஸ் பக்கம்

மக்கள் ஒபிஎஸ் பக்கம்

எம்எல்எக்கள் சசிகலா ஆதரவு நிலையில் டிடிவி தினகரன் பக்கம் இருந்தாலும் மக்கள் ஆதரவு ஒபிஎஸ் பக்கமே இருக்கிறது என்று தந்திடிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+