நல்ல உடல்நிலையில் கருணாநிதி.. 7வது நாளாக தொடரும் சிகிச்சை
திமுக தலைவர் கருணாநிதிக்கு 7வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தற்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவருக்கு 7வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார். நேற்றுதான் அவர் மீண்டும் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். முழுக்க முழுக்க அவர் உடல்நிலை இயல்புநிலையை அடைந்துள்ளது.

கடந்த நான்கு நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர் சக்கர நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். ஒருவாரம் முன் திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் பிரச்சனை ஏற்பட்டது.
அவரது இரத்த அழுத்தம் அதிகமானது. அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை குணமானது. மருத்துமனையில் தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
அவருக்கு 7வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனையில் 7வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டு தற்போது சீராகி உள்ளது.












Click it and Unblock the Notifications