கோவிலில் நடக்க இருந்த 8 ஜோடி சிறுவர் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ஓசூர் அருகே 8 ஜோடி சிறுவர் திருமணங்களை உதவி ஆட்சியர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தொட்ட மஞ்சியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடப்பதாக இருந்தது.
இதில் 18 வயதிற்கு குறைவான பெண்களுக்கும் திருமணம் நடப்பதாக கலெக்டர் ராஜேசுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் ஓசூர் உதவி கலெக்டர் பிரவீன் நாயர், தேன்கனிக்கோட்டை தாசில்தார் மாதேஸ்வரி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று அங்கு விசாரித்தனர்.
இதில் 18 வயதிற்கு குறைவான 8 இளம் பெண்களுக்கும் திருமணம் நடக்க இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications