பொள்ளாச்சி: அரசு பஸ் - லாரி மோதி விபத்து 8 பேர் பலி
கோவை: பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்த அனைவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி ஒரு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. இதேபோல கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று மாலை 4.30 மணியளவில் பல்லடம் சாலை கருமாபுரம் விலக்கில் அரசு பேருந்தும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. பேருந்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த பயணிகளை மீட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பொள்ளாச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications