காஞ்சிபுரம் அருகே பேருந்து- வேன் மோதல்: 8 பெண்கள் உட்பட 9 பேர் பலி
காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் 9 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காஞ்சிபுரம் அருகே பேருந்து- வேன் மோதல்- வீடியோ
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற இடத்தில் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 8 பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை- காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தாமல். இந்த நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் பேருந்தும் வேனும் பயங்கரமாக மோதின.

இதில் சம்பவ இடத்திலேயே 8 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். படுகாயமடைந்த நிலையில் 10 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியான அனைவரும் வேலூர் மாவட்டம் சிறுனை மல்லியைச் சேர்ந்தவர்கள். துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வேனில் திரும்பும் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications