8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை கலெக்டராக பி. மகேஸ்வரி நியமனம்
சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இணைச் செயலாளர் பி.மகேஸ்வரி, சென்னை மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பி.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு இயக்குனர் டி.பி.ராஜேஷ், கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் ஏ.ஞானசேகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
நிதித்துறை துணைச் செயலாளர் பிரஷாந்த் எம்.வத்நேர், திருவண்ணாமலை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இணைச் செயலாளர் பி.மகேஸ்வரி, சென்னை மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர்கள் கமிஷனர் எல்.சுப்பிரமணியன், விழுப்புரம் கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். லால்குடி துணை கலெக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய இணை மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
கும்பகோணம் துணை கலெக்டர் மந்திரி கோவிந்த ராவ், சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (கல்வி) நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி துணை கலெக்டர் எஸ்.கோபால சுந்தரராஜ், சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனராக (தெற்கு) நியமிக்கப்பட்டார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications