கோ ஆப்டெக்ஸை சீரமைத்த சகாயம் திடீர் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அதை சீரமைத்த சகாயம், வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கிஸ் சுங்கத் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சகாயம்:

கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனரான யு.சகாயம், இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

9 IAS officers transferred in Tamil Nadu…

தேவ் ராஜ தேவ்:

மாநில மனித உரிமைகள் ஆணைய முன்னாள் செயலாளர் தேவ் ராஜ் தேவ், ஒழுங்குமுறை நடவடிக்கை ஆணைய கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

சி.சகாய மூர்த்தி:

ஊரக வளர்ச்சி மற்றும் கிராம பஞ்சாயத்து துறை இணை செயலாளர் சி.சகாய மூர்த்தி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

எம்.வீர சண்முக மணி:

தொழிலாளர் துறை கமிஷனர் எம்.வீர சண்முக மணி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

ராஜேஷ் லக்கானி:

எரிசக்தித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், எரிசக்தித் துறை செயலாளர் பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.

அபூர்வா:

இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி கமிஷனர் அபூர்வா, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

ஜெக்மோகன் சிங் ராஜூ:

சிறு தொழில் வளர்ச்சி கழகம் நிர்வாக இயக்குனராக ஜெக்மோகன் சிங் ராஜூ நியமிக்கப்படுகிறார்.

கே.நாகராஜன்:

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை இணை செயலாளர் கே.நாகராஜன், தமிழ்நாடு கிடங்கு கழக நிர்வாக இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

வி.அமுதவள்ளி:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர் வி.அமுதவள்ளி, தமிழ்நாடு சிறுதொழில் கழக நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+